மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு பெரிதும் அமைதியான முறையில் நடைபெற்றது. எனினும் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் 12 வாக்குச்சாவடிகளை பாரதிய ஜனதா கட்சியினர் கைப்பற்றியதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைமை தேர்தல் ஆணையத்திடம் குற்றஞ்சாட்டியுள்ளது. பிற மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் கணவர் ஜுபின் இரானியுடன் சென்று மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகை ஹேமமாலினி விலே பார்லி பகுதியில் உள்ள வாக்கு மையத்தில் மகள்கள் இஷா தியோல் மற்றும் அஹானா தியோல் ஆகியோருடன் சென்று ஜனநாயக கடமை ஆற்றினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன், மகள் சாராவுடன் குடும்ப சகிதமாக சென்று மும்பை பாந்தரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதில் சாராவும் அர்ஜுனும் முதல்முறையாக வாக்களிப்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் , மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருடன் ஜுஹு பகுதியில் உள்ள வாக்கு மையத்தில் வாக்களித்தார். பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் மும்பையில் வாக்கு பதிவு செய்தனர். மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரும் தங்கள் வாக்கை தத்தமது ஊர்களில் பதிவு செய்தனர்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது சுமார் 69% தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. இன்னும் 3 கட்டங்களாக மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் 170 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை தமிழகம், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இது தவிர உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், காஷ்மீர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பகுதியிளவில் தேர்தல் நடந்துள்ளது. இங்கெல்லாம் சில கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில கட்ட தேர்தல்கள் இனி நடைபெற உள்ளன. இது தவிர டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் இனிமேல்தான் தேர்தல் நடைபெற உள்ளது
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!