ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் 45வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் வார்னர், வில்லியம்சன் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். வில்லியம்சன் 13 ரன்னில் வெளியேறினர். வார்னருடன் ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே அதிரடியாக விளையாடினார். வார்னர் நிதானமாக ஆடினார்.
வார்னர் 32 பந்தில் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த மணிஷ் பாண்டேவும் 36 பந்தில் 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னர், மணிஷ் ஆட்டமிழந்ததை அடுத்து ஐதராபாத் அணி சரிவை சந்தித்தது. விஜய் சங்கர்(8), ஷகிப் அல் ஹசன் (9), ஹூடா (0), சாஹா (5), புவனேஷ்வர் குமார் (1) என அடுத்து வந்த யாரும் இரட்டை இலக்கை எட்டாமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ரஷித் கான் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஐதாராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆரோன், தாமஸ், கோபால், உனத்கட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில், சஞ்சு சாம்சன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 48 ரன் விளாசினார். லிவிங்ஸ்டன் 44, ரஹானே 39, ஸ்மித் 22 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணியில் கலீல் அகமது, ஷகிப் அல் ஹசன், ரஷித் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
11 வது லீக் போட்டியில் ஆடியுள்ள ஐதராபாத் அணிக்கு இது 6 வது தோல்வி. ராஜஸ்தானுக்கு இது 5 வது வெற்றியாகும்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி