கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸல் அந்த அணி நிர்வாகத்தின் முடிவுகள் சரியாக இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டியில் விளையாடிவுள்ளது. இதில் வெறும் 4 போட்டிகளில் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளது. அத்துடன் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் கொல்கத்தா அணி தொடர் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸல் அந்த அணி நிர்வாகம் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “எங்களது அணி சிறப்பான அணி. ஆனால் அணி நிர்வாகத்தின் தவறான முடிவால் கொல்கத்தா அணி தோற்கிறது. குறிப்பாக ஒரு சில போட்டிகளில் நாங்கள் சரியான பந்துவீச்சாளர்களை களமிறக்கியிருந்தால் அணி வெற்றிப் பெற்றிருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் மிகவும் கஷ்டமானது.
எங்கள் அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மோசமாக இருந்தும் அந்த அணியை 170 ரன்கள் எடுக்கவிட்டோம். இவ்வாறு பந்துவீசினால் எவ்வாறு வெற்றிப் பெற முடியும். அத்துடன் அனைவரும் கூறும் வகையில் அணியின் பேட்டிங் மோசமாக இல்லை. மாறாக எங்கள் அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை தான் சரியாக இல்லை. இந்த ஐபிஎல் தொடரில் எங்கள் அணிதான் சொதப்பலான பீல்டிங் உடைய அணி.
இதனால் எங்கள் அணியின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். எனினும் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோற்றுள்ளதால் எங்கள் அணியின் வீரர்கள் அனைவரும் மிகவும் சோர்வுடன் உள்ளனர். அதேபோல நானும் என்னுடைய அறையை விட்டு வெளியே வருவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு எங்கள் அணி வெற்றிப் பெறுவதே ஒரே வழி” எனத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணியின் நாளை மும்பை அணியுடன் விளையாடவுள்ளது. மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி சரியாக விளையாடுவதில்லை. ஏனென்றால், இதுவரை இந்த இரு அணிகளும் 23 போட்டிகளில் 18ல் மும்பை அணி வெற்றிப் பெற்றுள்ளதால். இவற்றில் 5ல் மட்டும் கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!