தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க என். சேகர் என்ற சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.


Advertisement

ஆயிரத்து 200 உறுப்பினர்களை கொண்ட தமிழ் திரைப்படத் திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தை விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகம் செய்துவந்தனர். ஆனால் விஷால் தலைமையிலான நிர்வாகம் 7 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாகவும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணியினர் தி. நகர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். 


Advertisement

இதன் பின் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மேலும் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து சங்கத்தை நிர்வகிக்க அரசு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு சிறப்பு அதிகாரியை அரசு நியமித்துள்ளது. வரும் திங்கள் கிழமையில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் சிறப்பு அதிகாரியான என்.சேகர் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement