பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறகிறது. அந்த வகையில் வாரணாசி தொகுதியில் வரும் மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் மறுபடியும் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவையும் மோடி இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்ட அஜித் ராய் களமிறங்குகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி மோடியை எதிர்த்து போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியான. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி அவரை வேட்பாளராக அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிரியங்கா காந்தி மோடிக்கு எதிராக களமிறங்காதது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தீவிரம் காட்டவில்லை எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் வாரணாசியில் போட்டியிடுவார் எனத் தொண்டர்கள் கிளப்பிய வதந்திகளை பயன்படுத்தி பாஜகவை குழப்பத்தில் வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் தோல்வியுடன் அவரின் அரசியல் பயணம் தொடங்கவேண்டாம் எனக் கருதி அவர் பெயர் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்றால், அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?