உலகம் முழுவதும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் வெளியானதை குறிக்க கூகுள் சிறப்பம்சம் ஒன்றை தனது தேடு தளத்தில் செயல்படுத்தியுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலகையே காப்பாற்றும் சர்வ வல்லமை படைத்த ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களையும், அலறவிட்ட மெகா வில்லன் தானோஸ் கொல்லப்பட்டனா? என அவெஞ்சர்ஸ் படம் தொடங்கிய காலகட்டதிலிருந்து ரசிகர்களுக்குள் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் இப்படம் விடை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியானது. இதனைக் குறிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது தளத்தில் ஒரு சிறப்பு அம்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கூகுள் தளத்தில் பயனாளர்கள் அவெஞ்சர்ஸ் படத்தின் ‘தானோஸ்’ கதாபாத்திரத்தை தேடினால், அவரின் உருவம் வரும். அந்த உருவத்திற்கு அருகில் ‘இன்ஃபினிடி கெளன்ட்லட்’(Infinity Gauntlet) உடனிருக்கும். இந்த கெளன்ட்லட் கிளிக் செய்தால் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை பாதியாக குறையும். உதாரணமாக 900 மில்லியன் தேடுதல் பக்கங்கள் இருந்தால் அது 450 மில்லியனாக குறையும்.
அத்துடன் கூகுள் தேடுதல் முடிவுகளில் திரையிலிருந்து மறைய ஆரம்பிக்கும். பின்னர் மீண்டும் அந்த கெளன்ட்லட் கிளிக் செய்தால் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அத்துடன் மறைந்த தேடுதல் முடிவுகள் மீண்டும் திரையில் தோன்றும். இது அவெஞ்சர்ஸ் படத்திற்கான கூகுளின் ‘ஈஸ்டர் எஃகு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு அம்சத்தை ரசிகர்கள் தங்களின் கணினி, மடிக்கணினி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றில் சோதனை செய்து பார்க்கலாம். கூகுளின் இச்சிறப்பு ஏற்பாடு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சோதித்து பார்த்து ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் ‘Go to Google and Search Thanos and Tap on the gauntlet icon’ என்று பகிர்ந்துவருகின்றனர்.
Loading More post
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
"சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் விவேக்" - பிரதமர் மோடி புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி