கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. குர்கர்னி, டர்னர் ஆகியோருக்கு பதிலாக ஓஷானே தாமஸ், வருண் ஆரோன் ராஜஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், குல்தீப் யாதவிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் லின், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஆரோன் வீசினர். முதல் 3 பந்துகளை சந்தித்த லின் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். முதல் ஓவரில் லெக் பைஸ் முறையில் மட்டும் 4 ரன்கள் எடுக்கப்பட்டது. 5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. சுப்மன் கில் 14 ரன்னில் ஆரோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்துள்ளது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதனால், இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?