உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிரடி வீரர் பொல்லார்ட், சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருந் தது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே அளித்து விட்டன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் ஐசிசி-யிடம் சமர்ப்பித்தது.
அதில், ஐபிஎல். தொடரில் மிரட்டும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மீண்டும் திரும்பியுள்ளார். அதிரடி வீரர் பொல்லார்ட், சாமுவேல்ஸ், சுழற் பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பில்லை. 39 வயதான கிறிஸ் கெய்லுக்கு வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டி.
அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் அலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், அஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமர் ரோச், ஆந்த்ரே ரஸல், ஒஷானே தாமஸ்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை