படப்பிடிப்புக்கு நடுவே ஷாப்பிங் - லண்டன் கடைவீதியை வலம் வந்த ரகுல் ப்ரீத்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

படிப்பிடிப்புக்கு இடையில் நடிகை ரகுல் ப்ரீத், லண்டன் கடைவீதிகளை சுற்றி ஷாப்பிங் செய்துள்ளார்.


Advertisement


பொதுவாக நடிகைகளுக்கு ஷாப்பிங் மோகம் அதிகம். அப்படிதான் ரகுல் ப்ரீத், தனது படப்பிடிப்பு பணிகளுக்கு இடையில் லண்டன் கடைத் தெருக்களில் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அந்தச் செய்தி இப்போது பாலிவுட் சினிமா ஊடகங்களில் முக்கிய செய்தியாக வர தொடங்கி உள்ளது.


Advertisement

இது சம்பந்தமாக அவருக்கு நெருக்கமான ஒருவர், “ரகுல் ப்ரீத் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் போனபோதுதான் அவர் தனது ஷூட்டிங் இடைவெளிக்கு நடுவே ஷாப்பிங் செய்ய புறப்பட்டு போனார். அவருக்கு ஷாப்பிங் மோகம் அதிகம். படத்திற்கான பாடல் காட்சி ஆக்ஸ்போர்டு சாலை மற்றும் ஹைட் பார்க் பகுதியில் நடந்தது. இந்தப் பகுதியில் தரமான பிராண்ட் பொருட்கள் கிடைக்கும். ஆகவே அவர் இங்கு சென்று விருப்பமான பல பொருட்களை ஷாப்பிங் செய்து திரும்பினார். ரகுலுக்கு அடித்து பிடித்து பேரம் பேசி வாங்குவது பிடிக்கும்”என்று கூறியுள்ளார்.

இது குறித்து ராகுல், “ஆமாம். நாங்கள் பாடல் காட்சியை எடுத்தோம். ஆக்ஸ்போர்டு சாலை ஷாப்பிங் செய்வதற்கான முக்கிய பகுதி. ஆகவே சென்று பொருட்களை வாங்கினேன். மிகவும் தூண்டுதலாகவும் விளையாட்டாகவும் இருந்தது” எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் ரகுல் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ திரைப்படம் வரும் மே மாதம் 17 ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்கியுள்ளார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement