மோடி தன்னை குறித்து பேசியதை நேர்மறையாக பார்ப்பதாக நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியும் எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா தெரிவித்துள்ளார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் பிரதமர் மோடி தன் இல்லத்தில் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு விஷயங்களை அக்ஷய் குமாருடன் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். இந்தக் கலந்துரையாடலின்போது, எதிர்க்கட்சிகளில் கூட தனக்கு நண்பர்கள் இருப்பதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனக்கு வருடா வருடம் குர்த்தாவும் இனிப்புகளும் அனுப்புவார் என்றும் மோடி தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய இளமைகால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சமூக வலைத்தளங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மோடி ''நான் உங்களையும் (அக்ஷய் குமார்), ட்விங்கிள் கண்ணாவையும் (அக்ஷய் குமாரின் மனைவி) ட்விட்டரில் பின் தொடர்கிறேன். ட்விங்கிள் கண்ணா எப்போதும் என் மீது கோபத்தை காட்டுவார். அதனால் உங்கள் வீட்டில் அமைதி நிலவும் என நினைக்கிறேன். என்னால்தான் நீங்கள் தப்பித்துக்கொள்கிறீர்கள்'' என நகைச்சுவையாக தெரிவித்தார்.
அதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அக்ஷய் குமாரின் மனைவி, ''இதனை நான் சாதகமாகவே பார்க்கிறேன். எனது பதிவுகளையும் பிரதமர் வாசிக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார். நடிகையாக இருந்த அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா தற்போது எழுத்தாளராக உள்ளார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!