இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமானது, தொடர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் தென்மேற்கு வங்கடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதியில் 30-40 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் எனவும், நாளை மறுநாள் மற்றும் 27-ஆம் தேதி 40-50 கிமீ காற்ற வீசும் என கூறப்பட்டுள்ளது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?