3-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 66 சதவீத வாக்குகள் பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைக்கா‌ன 3-ஆம் கட்ட தேர்தலில் சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


Advertisement

நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக 116 மக்களவைத் ‌தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குஜராத்தில், 63.67 சதவீத வாக்குகளும், கேரளாவில் 71.67 சதவீத வாக்குகளும், கர்நாடகாவில் 67.56 சதவீத வாக்குகளும் பதிவாகின. உத்தரபிரதேசத்தில் 61.35 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் 58.98 சதவீத வாக்குகளும், பதிவாகின. கோவாவில் 73.23 சதவிகிதம் பேரும், சத்தீஸ்கரில் 64.68 சதவிகிதம் பேரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


Advertisement

மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் 79.67 சதவீதமும், ஒடிசாவில் 60.44 சதவீதமும், பீகாரில் 59.97 சதவீதமும், திரிபுராவில் 79.57 சதவிதமும் வாக்குகள் பதிவாகின.

நாட்டிலேயே அதிகபட்சமாக அசாமில் 80.73 சதவிகிதமும், குறைவாக, ஒரே தொகுதிக்கு தேர்தல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரில் 13.61 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement