தினேஷ் கார்த்திக் உட்பட 5 வீரர்கள் ஓய்வெடுக்க கொல்கத்தா நிர்வாகம் அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா உள்ளிட்ட 5 வீரர்கள் ஆகியோரை அந்த அணி ஓய்வேடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. 


Advertisement

கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி மற்றும் 6ல் தோல்வியடைந்துள்ளது. அத்துடன் இந்த அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தற்போது தோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த அணியின் நிர்வாகம் சில வீரர்களுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. 


Advertisement

அதன்படி அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, நிகில் நாயக், ஸ்ரீகாந்த் முண்டே மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தினேஷ் கார்த்திக் மற்றும் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணியின் ஆலோசகரான அபிஷேக் நாயருடன் நேரம் செலவிடவுள்ளனர். 

தினேஷ் கார்த்திக் மற்றும் ராபின் உத்தப்பா இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கவில்லை. இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் தினேஷ் கார்த்திக் ஒரு அரைசதத்தின் உதவியுடன் 117 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அத்துடன் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பொறுப்பும் கேள்விக்குரியாகிவுள்ளது. ஏனென்றால் இவர் சிறப்பாக விளையாடிவரும் ரஸலை 7 இடத்தில் இறக்கிவிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.


Advertisement

அதேபோல ராபின் உத்தப்பா நடப்பு ஐபிஎல் தொடரில் 220 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அத்துடன் இந்த தொடரில் உத்தப்பா நிறையே பந்துகளை வீணடிக்கிறார். அதுவும் கொல்கத்தா அணியின் தோல்விக்கு ஒரு காரணம் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement