மக்களவைக்கு 3-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

3rd-Phase-election-for-Lok-Sabha

மக்களவைக்கு மூன்றாம் கட்டமாக 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.


Advertisement

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,‌ இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்ப‌திவு நடைபெற்றுள்ளது. இந்‌நிலையில் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்‌ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது. இங்கு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.


Advertisement

அதன்படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா 14 தொகுதிகளிலும், உத்தரப்பி‌ரதேசத்தில் 10 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டீஸ்கரில் 7, ஒடிஷா‌வில் 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காள‌ம் ‌மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகளிலும் அசாமில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோவாவில் 2 தொகுதிகளில், காஷ்மீர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையுவில் தலா 1 தொகுதிகளில்‌ வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement