டாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸை வென்று பந்துவீச தீர்மானித்துள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 10 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று 4வது இடத்தில் உள்ளது. 

ஆனால் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு முன்பு உள்ளது. எனவே இந்தப் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த அணி விளையாடுகிறது. ராஜஸ்தான் அணிக்கு கடந்தப் போட்டி முதல் ரஹானேவிற்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement