JUST IN

Advertisement

கொழும்பு விமான நிலையம் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் இலங்கையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் கொழும்பு வி‌மானநிலையம் அருகே இன்று காலை மேலும் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.


Advertisement

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் நேற்று குண்டுவெடிப்பு‌ தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இதனால் இலங்கை முழுவதும் பதற்றம் நிலவும்‌ சூழலில் தலைநகர் கொழும்புவில் விமான நிலையம் அருகே வெடிகுண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்‌பட்டது.


Advertisement

விமான‌நிலையத்தின் பிரதான சாலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்‌ளனர். 6‌ அடி குழாய் ஒன்றில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்‌ளது.

முன்னதாக இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 6 இந்தியர்கள் உள்பட 290 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 500-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement