3 ஆம் கட்ட வாக்குப் பதிவு: இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வு

Campaigning-intensifies-for-3rd-phase-of-polling

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில், இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.


Advertisement

குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள், கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகள், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்குவங்கம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகளுக்கு வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 


Advertisement

இதே நாளில், ஜம்மு-காஷ்மீர், டாமன் டையூ, தாட்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவை  சேர்த்து மொத்தம் 115 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக இத்தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வந்த அனல் பறக்கும் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. 7கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement