இரண்டாவது வெற்றி பெறுமா பெங்களூர் - கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 


Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியஸ்க்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் விளையாடவில்லை என்று விராட் கோலி தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஹெண்ட்ரிச் கலாசென் களமிறங்குகிறார். அதேபோல், டேல் ஸ்டெயில் அந்த அணியில் விளையாடுகிறார்.


Advertisement

கொல்கத்தா அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றியும், 4இல் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 7 தோல்வி அடைந்துள்ளது. அதனால், தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பெங்களூர் அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement