சேலம் உருக்காலை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டமிருந்தால் அதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

சேலம் உருக்காலை தமிழகத்தின் மதிப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் இதனால் நேரடியாக 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆலையை தனியாரிடம் விடும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் முதல்வர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சேலம் ஆலையை விரிவாக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு 2 ஆயிரத்து 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதையும் முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார். சேலம் உருக்காலைக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் அது லாபம் அளிக்கும் நிறுவனமாக மீண்டும் மாறும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement