தமிழ்நாட்டில் 37 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மதுரை தொகுதி தவிர பிற மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்துள்ளது. மதுரை தொகுதியில் மட்டும் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 67.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?