மெதுவாக விளையாடிய சென்னை அணி : ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 132 ரன்கள் சேர்த்துள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 33வது போட்டி சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வெடுத்துள்ளதால், அவருக்கு பதிலாக சென்னையின் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா தலைமை ஏற்றுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 


Advertisement

இதையடுத்து களமிறங்கிய சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரும் 70 ரன்களை கடந்தும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். பின்னர் அணியின் ஸ்கோர் 79 ரன்கள் இருக்கும் போது, 31 (29) ரன்களில் வாட்சன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து டு பிளஸிஸ் 45 (31) ரன்களிலும், ரெய்னா 13 (13) ரன்களில் வெளியேறினார். 

பின்னர், வந்த வீரர்கள் அனைவரும் அடுத்து விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. சென்னையில் இறுதிவரை அவுட் ஆகாமல் விளையாடிய அம்பத்தி ராயுடு 25 (21) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement