பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்களின் முகவரிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Advertisement

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியாகின்றன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்களின் முகவரிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் மாணவர்கள் சமர்பித்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் ஏப்ரல் 22 முதல் 24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 6-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுவதாக தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement