கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு இம்மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டிலிருந்து 11 கோடியே 48 லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் வருமான வரித்துறையினரிடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
அதனைத் தொடர்ந்து காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஆய்வாளர் புகழ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்வது குறித்து நீதிபதி உடன் ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து கதிர் ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரியின் கணவர் தமோதரன் ஆகியோர் மீது தலா இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக, ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதும், அதன்பின்னர் கிடைத்த டைரி மற்றும் துண்டு சீட்டுகள் மூலம் தேர்தலையே ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!