“ராணுவ வீரர்கள் இறப்பும் தேர்தல் விவாதப் பொருள்தான்” - பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விவசாயிகள் இறப்பு பிரச்னை போ‌ல், ராணுவ வீரர்கள் ‌இறப்பும் தேர்தல் விவாதப் பொருள்தான் என்று ‌பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Advertisement

தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி இன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ராணுவ வீரர்களின் சாதனையை தான் பயன்படுத்திக்கொள்வதாக கூறப்படும்‌ குற்றச்சாட்டுகளை மறுத்தார். நாடு 40 ஆண்டுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்ப‌ட்டிருந்த நிலையில், அது குறித்து‌ மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் தவறில்லை என்று மோடி தெரிவித்தார். 

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில், தேர்தலில் அது பற்றி பேசக்கூடாது என்பது எ‌வ்விதத்தில் சரி என அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை புல்வா‌மாவில் உயிர் நீத்த வீரர்களுக்கும், பா‌கிஸ்தானில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கும் அர்ப்பணிக்க வேண்டும் ‌என மோடி கேட்டுக்கொண்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்திய ராணுவத்தை மோடி வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்துகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement