இன்று அறிவாலயம் வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த இன்று சென்னை அறிவாலயம் வருகிறார். 


Advertisement

திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய உறவினரின் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக இன்று மதியம் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார். மேலும் நண்பகல் 12.50 மணிக்கு அறிவாலயம் சென்று ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருவாரூர் தொகுதியில் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபடுவதால் நேற்று இரவே கிளம்பி சென்று விட்டார். எனவே சந்திரபாபு நாயுடுவை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்கின்றனர்.


Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் வீட்டிற்கே சென்று அரசியல் நிலவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவும் ஸ்டாலினும் பங்கேற்றனர். ஆனால் இன்று சந்திரபாபு நாயுடுவின் வருகை முழுக்க முழுக்க திருமண நிகழ்வுக்காக என்று சொல்லப்படுகிறது. 

ஆந்திராவில் எம்.பி தேர்தலும் எம்.எல்.ஏ தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இந்த வருகை நிகழ இருக்கிறது. மேலும் தேர்தலையடுத்து அடுத்த கட்டபணியை சந்திரபாபு நாயுடு தொடங்கிவிட்டார் எனத் தெரிகிறது. ஏற்கனவே இவர் பலமுறை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க கூடிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement