ஜார்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 3 நக்சலைட்டுகள் கொலை; ஒரு வீரர் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.


Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் பெல்பா காட் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. காலை 6 மணியளவில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கி சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

இதையடுத்து நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், பைப்வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement