[X] Close

ரிஷாப் பண்ட் கழட்டிவிடப்பட்டது ஏன் ? - அனுபவமும்.. அவசரமும்..

Subscribe
World-Cup-2019-Indian-Team-Squad---Why-Rishabh-Pant-Missing--

2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இளம் வீரர் ரிஷாப் பண்ட்டிற்கு இடமளிக்கப்படவில்லை.


Advertisement

ஒருநாள் போட்டி தொடருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான கிரிக்கெட் அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. 


Advertisement

இந்திய அணி : 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணைக் கேப்டன்) ஷிகர் தவான், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்தி, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி ஆகிய 15 பேர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அணியில் விளையாட மற்றவர்கள், மாற்று ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.

இந்திய அணி அறிவிக்கப்பட்டதும், சமூக வலைத்தளங்கள் உட்பட கிரிக்கெட் உலகில் எழுப்படும் கேள்விகளுள் முக்கியமான ஒன்றாக ரிஷாப் பண்ட் எங்கே ? என்பது இருக்கிறது. இளம் வீரராகவும், அதிரடியாக ஆடும் நபரகாவும் வலம் வந்த பண்ட்-ஐ எடுக்காததற்கு என்ன காரணம் ? என்ற கேள்விகளும் எழும்பியுள்ளன. 


Advertisement

இருவருக்கும் உள்ள சில வித்தியாசங்களை பொருத்தி பார்த்தால் இதற்கான காரணம் புரியும். 21 வயது நிரம்பிய ரிஷாப் பந்த் முதன்முதலில் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியது 2018ஆம் அக்டோபர் மாதம் தான். அப்படியென்றால் அவர் ஒருவருடன் அனுபவம் கூட இல்லாதவர். ஆனால் தினேஷ் கார்த்திக் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒருநாள் போட்டியை துவங்கினார். சுமார் 15 ஆண்டுகள் அனுபவம். 

ரிஷாப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே கீப்பர் தான் என்று கூறலாம். ஆனால் இருவரது பேட்டிங் திறனும் முற்றிலும் மாறுபடும். ரிஷாப் பண்ட் களமிறங்கினால் அதிரடியாக விளாசுவார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரியும் நேரத்தில் நிலைத்து ஆடுவாரா ? என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் அணியில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள போது களமிறங்கினால் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடக்கூடியவர். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அதிரடியும் காட்டுவார். அதனை இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பை இறுதிப் போட்டியில் அனைவருமே பார்த்தனர். 

அனுபவமும், அவசரமும் :

இதுமட்டுமின்றி கீப்பிங்கிலும் அனுபவம் என்பது மிக முக்கியம். ஒருவேளை தோனிக்கு காயம்பட்டாலோ அல்லது ஓய்வு தேவைப்பட்டாலோ அந்த நேரம் களமிறங்கும் கீப்பர் அணிக்கும் ஆலோசனை வழங்க வேண்டும். அதேசமயம் அணியின் நிலையை உணர்ந்து சாதுர்யமாக செயல்பட வேண்டும். எடுத்துக்காட்டாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் வந்திருந்தபோது நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில், ஆஸ்திரேலியாவின் கீப்பர் அலெக்ஸ் ரேவை ரன் அவுட் ஆக்குவதற்காக ஸ்டம்பை திரும்பி பார்க்காமல் பண்ட் பந்தை வீசுவார். ஆனால் அந்த ரன் அவுட் மிஸ் ஆகிவிடும். 

அந்த நேரம் மட்டும் அலெக்ஸ் அவுட் ஆகியிருந்தால், இந்தியா வெற்றி பெற்றிருக்கும். இந்த நிகழ்வு பண்ட்க்கு எதிராக கடும் விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக அனுபவம் இல்லதாதும், அவசரமும் தான் பண்ட் இப்படி ரன் அவுட்டை கோட்டை விட்டதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இதனால் தான் தற்போது அனுபவமும், அவசரமும் இல்லாத தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close