உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மும்பையில் இன்று நடைபெற்ற தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


Advertisement

                  

இந்தப் பட்டியல் தற்காலிகப் பட்டியலே. மே 23ம் தேதிக்குள் இந்தப் பட்டியல் உள்ள பெயர்களை ஐசிசியின் அனுமதியில்லாமல் பிசிசிஐ மாற்ற முடியும். 

loading...

Advertisement

Advertisement

Advertisement