இடம் ஒதுக்குவதில் பாரபட்சம் - செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி செந்தில் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


Advertisement

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகின்றார். ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

                 


Advertisement

இந்நிலையில், 16ம் தேதி நடைபெறும் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நேரம், இடம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜோதிமணி மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

                         

முன்னதாக, வேட்புமனுத் தாக்கலில் போது, நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக போலீசாரிடம் செந்தில் பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement