வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் புகைப்படம் எடுத்த டிஆர்எஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

கடந்த 11-ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட போக்ராம் என்ற பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டிருந்த வெங்கடேஷ் என்பவர் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் பின்னணியில் புகைப்படம்‌ எடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படம் வெளியானதையடுத்து அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement