“வாக்குச் சீட்டு முறைக்கு திரும்பவேண்டும்" - சந்திரபாபு நாயுடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாக்குச் சீட்டு முறைக்கு திரும்பவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கைவிடுத்துள்ளார்.


Advertisement

ஆந்திர மாநிலத்தில் கடந்த 11ஆம் தொகுதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்களிடே மோதல் ஏற்பட்டது. அத்துடன் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார்கள் எழுந்தன. 


Advertisement

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கடிதம் ஒன்று அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர், “ஆந்திராவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சுமார் 40 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி சொல்வதை கேட்டு நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாகவும், தேசத்தை பேரழிவுக்கு இட்டுச்செல்லும் வகையிலும் உள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் நம்பதன்மை அதிகரிக்கும் முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பவேண்டும். இதை தான் நான் தேர்தல் ஆணையத்திற்கு தற்போது வலியுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்தார். எனினும் ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாராப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement