பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 


Advertisement

ரஷ்யா-இந்தியா இடையேயான நல்லுறவை மேலும் வலுவடைய சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மோடிக்கு இவ்விருதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளதாக, ரஷ்ய தூதரகம் தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் புனிய ஆண்ட்ரூ விருதுடன் சேர்த்து பிரதமர் மோடிக்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

             


Advertisement

தமக்கு அளிக்கப்பட்ட விருதிற்காக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மரியாதைக்குரிய இந்த விருதினை பெற்றுக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த மாதத்தில் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது சர்வதேச விருது இது ஆகும்.

              

'புனித ஆண்ட்ரூ' விருது 1698ம் ஆண்டு ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. சோவியத் யூனியனில் இந்த விருது வழங்குவது நிறுத்தப்பட்டது. 1998ம் ஆண்டு முதல் மீண்டும் புனித ஆண்ட்ரூ விருது வழங்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement