தேர்தல் நிதி பத்திர விவரத்தை மே 30ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தேர்தல் நிதி பத்திரம் என்பது ஒரு வகை பணப்பரிமாற்றமுறை. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவர்கள் வங்கிகளில் கொடுக்கப்படும் பத்திரங்கள் மூலமாக தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு பணத்தை அளிக்கலாம். இது காசோலையாகவோ அல்லது மின் - பணப்பரிமாற்றம் மூலமாகவோ வங்கியில் செலுத்தப்படும்.
இந்த முறையில் யார் நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரம் இடம்பெறாது. குறிப்பிடப்பட்ட அரசியல் கட்சிகள் பத்திரங்களை பணமாக பெற்றுக்கொண்டு கட்சிப்பணிகளில் ஈடுபடலாம். இந்த முறையை பாஜக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் யாரென்றே தெரியாதநிலை உள்ளதாகவும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து வெளிப்படைத் தன்மை இல்லாத இந்த தேர்தல் நிதி பத்திர முறைக்கு தடை விதிக்கக் கோரி அரசு சாரா நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில் தேர்தல் நிதி பத்திர விவரத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்து மே 30ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை