கடலில் சிக்கித் தவித்த நபரை காப்பாற்றிய இந்தியக் கடற்படை அதிகாரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியக் கடற்படை அதிகாரி ராகுல் தலால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நபரை காப்பாற்றியது சமூக வலைத்தளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


Advertisement

இந்தியக் கடற்படையில் பணியாற்றிவருபவர் ராகுல் தலால். இவர் கடந்த 5ஆம் தேதி தனது மனைவியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இவர்கள் இருவரும் வைப்பின் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அத்துடன் தன்னை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டு கொண்டிருந்தார். 


Advertisement

இதனைக் கண்ட தலால் உடனே தண்ணீரில் இறங்கி நீச்சலிட்டு அவரது அருகில் சென்றார். இவர் சில நிமிடங்களில் அந்த நபரிடம் சென்றிருந்தாலும் கரைக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் இவரின் நேர்த்தியான நீச்சலால் கடுமையாக எழுந்த கடல் அலைகளை கடந்து சுமார் 25 நிமிடங்களில் பத்திரமாக அந்த நபருடன் கரைக்கு திரும்பினார். அதன்பின்னர் அச்சத்துடனும் மிகுந்த அழுத்தத்துடனும் இருந்த அந்த நபரை தலால் முதலுதவி கொடுத்து மீண்டும் காப்பாற்றினார். 

இந்தச் சம்பவம் குறித்து இந்தியக் கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று செய்தி பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவைக் கண்ட பொதுமக்கள் கடற்படை அதிகாரியின் இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர். தனது விடுமுறை நாளிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் சிக்கிய மனிதரை காப்பாற்றிய தலாலின் செயல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement