JUST IN

“பாஜக தேர்தல் அறிக்கை ஒரு கற்பனை கதாபாத்திரம்” - தமிழிசைக்கு கனிமொழி பதில்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, சூப்பர் ஸ்டார் போன்றது என தமிழிசை கூறியதற்கு கனிமொழி பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் அறிக்கை எனக் குறிப்பிட்டார். 

மேலும், “மக்களை ஏமாற்றாமல் ஏற்றம் பெற வைக்கும் அளவுக்கு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பெண்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், எல்லோரையும் கவனத்தில் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை. நீட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது தவறு. தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்பது நிஜமல்ல எனவும் அது கற்பனை கதாபாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement: