விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிப்பு - விரைவில் நாடு கடத்த வாய்ப்பு

Vijay-Mallya-s-plea-against-extradition-rejected

லண்டனிலிருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கோரிய விஜய் மல்லையாவின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 


Advertisement

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தொழிலதிபர் மல்லையா லண்டனில் குடியேறினார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவர சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. மல்லையாவை நாடு கடத்தலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

           


Advertisement

மல்லையாவை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை செய்ய அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அனுமதியை எதிர்த்து விஜய் மல்லையாவும்  மேல்முறையீடு செய்தார். 

இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. அதனால், அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement