சித்திரை ஸ்பெஷல் ! மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நம்மளோட நாக்கு அறுசுவைக்கு அடிமைப்பட்டு, பழக்கப்பட்டதுதான். கண்டிப்பாக சித்திரை சீசன்களில் கிடைக்கிற பல வகையான மாங்காய்களை வைத்து அறுசுவையும் கலந்த மாதிரி செய்கிற பச்சடி நம் உடலுக்கு ரொம்ப நல்லது. ஊர்ப் பக்கங்களில் இந்த மாங்காய் பச்சடியை சித்திரைத்திருநாள் ஸ்பெஷலாக செய்வார்கள். இப்போது மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.


Advertisement

தேவையான பொருட்கள்:
மாங்காய் - 250 கிராம்
வெல்லம் - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 கொத்து
வேப்பம்பூ (காய்ந்தது) - சிறிதளவு
உப்பு - சிறிதளவு   


Advertisement

செய்முறை:


முதலில் மாங்காயை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, பின் விரல் நீளத்திற்கு சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். வெல்லத்தை சுடுநீரில் கரைத்து, தூசியின்றி வடிகட்டிக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில், 2 தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை அதில் போட்டு தாளிக்க வேண்டும். அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு கலக்கி விட்டு பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். பிறகு வெள்ளக்கரைசலை அதில் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும். நன்கு கொதித்து வந்த பிறகு காய்ந்த வேப்பம்பூக்களைப் போட்டு இறக்கவும்.


Advertisement

 

குறிப்பு:


1. அதிகமாக தண்ணீரை இதில் சேர்க்க வேண்டாம். புளிக்கரைசல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.

2. காய்ந்த வேப்பம்பூக்களை அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

3. அறுசுவைகளும் கலந்த இந்த மாங்காய் பச்சடி உடலுக்கு மிகவும் நல்லது. 

4. ரசம் சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் உகந்த தொடுகறி.

5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை உண்ணலாம்.

 

நன்றி: தர்ஷினி ராம்
 

loading...

Advertisement

Advertisement

Advertisement