தபால் வாக்குகளை செலுத்திய ஆசிரியர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆம்பூரில் தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை ஆர்வத்துடன் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து வாக்களித்தனர்.


Advertisement

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.


Advertisement

இதில் வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 12 தொகுதிக்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தேர்தல் பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது.

இந்த தபால் வாக்குகளை ஆசிரியர்கள் கொண்டு சென்று பூர்த்தி செய்து கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகளை  பெற்றவுடன் அதை பூர்த்தி செய்து ஆசிரியர்கள் ஒருவர் பின் ஒருவராக அங்கேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் அதை செலுத்தினர். மிகுந்த ஆர்வத்துடன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்குப் பதிவை பதிவு செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement