பேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி அருகே பேருந்து - வேன் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

போடியிலிருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தேனி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தீர்த்ததொட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது வேன் எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேன்
கவிழ்ந்ததில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் உட்பட 4  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம்
அடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்க 5 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டுள்ளன. 


Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர். 

தீர்த்ததொட்டியில் உள்ள வளைவு அருகே புளிய மரம் ஓன்று உள்ளது. இதனால் எதிரே வாகனம் வருகிறதா என்பதை அறிய முடியாத நிலை
நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement