“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ

“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ
“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ

நீர் ஆவியாவதை தடுக்க வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் பயன்படுத்துவதை  போல தெர்மாகோலை பயன்படுத்த திட்டமிட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க மிதக்கும் தெர்மாகோல் திட்டமொன்றை 2017ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அமைச்சரும் அதிகாரிகளும் அந்த இடத்திலிருந்து புறப்படும் முன்பே காற்றின் வேகத்தால் தெர்மாகோல் அனைத்தும் கரைக்கு அடித்துவரப்பட்டன. திட்டம் தோல்வியடைந்ததோடு பல விமர்சனங்களையும் சந்தித்தது. சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்தன. அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து இந்திய மீடியாக்கள் பேசின. 

அதற்கு பின் பல இடங்களிலும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் தொடர்பாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரையில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய அவர் தெர்மாகோல் திட்டம் பொறியாளர் செய்த தவறினால் தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.

வெளிநாடுகளில் ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி நீரை ஆவியாகாமல் தடுக்கும் முறை செயல்பாட்டில் உள்ளதாகவும் அந்த அளவுக்கு நிதி இல்லாததால் தாங்கள் தெர்மாகோலை பயன்படுத்த திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்வுக்கு பின் தான் ஒரு விஞ்ஞானியாக சித்தரிக்கப்பட்டதாகவும் நகைச்சுவையாக சிரித்தபடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com