“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்

harbajan-singh-twitt-about-csk-match-victory

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி குறித்து, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அசத்தலாக ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எட்டியது. தோனி 23 பந்தில் 37 ரன்களும், ராயுடு 15 பந்தில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணிக்கு 161 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 


Advertisement

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் 55(47) ரன்னில் ஆட்டமிழக்க, இறுதியில் சர்பராஸ் கான் 67(59) ரன்களில் ஆட்டமிழந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியில் அசத்தலாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டையும் சாய்த்தார். 

 

இந்நிலையில், ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கேவின் வெற்றி குறித்து தமிழில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  “நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல. உன்ன மட்டும் தான். நான் என்ன நம்புனேன். அத தாண்டி என் நண்பன் தோனி என்ன நம்புறாங்க? அதுக்கு கைமாறா வெற்றி.  ஓரம் கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும். சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி” என பதிவிட்டுள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement