மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.தேனி மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறே பேசிய எடப்பாடி பழனிசாமி,விவசாயிகளுக்காக எந்தத் தியாகமும் செய்ய தங்கள் அரசு தயாராக இருக்கிறது என்றும் விவசாயிகள் தான் தங்கள் உயிர் என்றும் பேசினார்.
தொடர்ந்து விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத் தருவதே தங்களின் முதல் கொள்கை என்றும் இப்பகுதி மக்கள் செழிப்புடன் வாழ அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனத் தெரிவித்தார். மேலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து தனிச்சியம் பிரிவு, செக்கான் ஊரணி மற்றும் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்குச் சேகரிப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!