ஆப்கான் டி20 கேப்டன் ஆனார் ரஷித் கான்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் அஸ்கார் ஆப்கான் நீக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், அந்நாட்டின் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 அணிகளுக்கு கேப்டனாக அஸ்கார் ஆப்கான் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கிவிட்டு மூன்று அணிக்கும் மூன்று கேப்டன்களை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் இன்று நியமித்துள்ளது.


Advertisement

(அஸ்கார் ஆப்கான்)

அதன்படி குல்பாடின் நைப், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் துணை கேப்டனாக ரஷித் கானும் டெஸ்ட் அணி கேப்டனாக ரமத் ஷாவும் துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 கேப்டனாகவும் துணைக்கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement