[X] Close

ஐந்து ஆண்டுகளில் ராகுலின் சொத்து மதிப்பு 69% அதிகரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 69% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒன்று அமேதி மற்றொன்று வயநாடு. கேரளாவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன்பின்னர் பேரணியாக சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றார்.


Advertisement

இந்நிலையில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15.9 கோடி எனத் தெரிவித்துள்ளார். இதில் அசையும் சொத்துகள் ரூ5.8 கோடியாகவும் அசையா சொத்துகள் ரூ.10.08 கோடியாகவும் உள்ளதாக அறிவித்துள்ளார். இது அவர் 2014ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பான ரூ9.4 கோடியைவிட அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 69% உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

குறிப்பாக ராகுல் காந்தியின் ரியல் எஸ்டேட் சொத்துகள் 2014ஆம் ஆண்டு ரூ.1.32 கோடியாக இருந்தது தற்போது ரூ.10.08 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் அவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.8.07 கோடியிலிருந்து ரூ.5.8 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் அவர் மேற்கொண்டுள்ள முதலீடுகள் என்றே தெரிகிறது. ஏனென்றால் அவர் ரூ.5.19 கோடியை முதலீட்டாக வைத்துள்ளார். மேலும் 333.3 கிராம் தங்க நகைகளையும் ராகுல் காந்தி வைத்துள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement