தோல்வி பயத்தில் தம்பிதுரை, தான் ஒரு துணை சபாநாயகர், மூத்த தலைவர் என்பதெல்லாம் மறந்து மிக கீழ்தரமான நடவடிக்கைகளில் இயங்குகிறார் என காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.ஜோதிமணியும், அதிமுக கூட்டணியில் துணை சபாநாயகர் தம்பிதுரையும் போட்டுயிடுகின்றனர். இவர்கள் இருவரும் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரையின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும் என கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுபோட்டால் கை கழுவக்கூட தண்ணீர் கிடைக்காது என்ற தம்பிதுரை கூற்றுக்கு பதிலளித்த ஜோதிமணி,“இதை சொல்ல தம்பிதுரை வெட்கப்பட வேண்டும். 10 வருடமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணை சபாநாயகராகவும் இருந்தவர், அவருக்காக பல அமைச்சரவை கதவுகள் தட்டாமலேயே திறக்கப்பட்டிருந்தபோதும், மோடிக்கு அடிமை செய்வதுதான் முக்கியம், கரூர் மக்களின் நலன் முக்கியமில்லை என செயல்பட்டவர். அதனால் அவருக்கு சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தோல்வி பயம் தெரிவதால், தம்பிதுரை தான் ஒரு துணை சபாநாயகர், அதிமுகவின் மூத்த தலைவர் என்பதெல்லாம் மறந்து மிக கீழ்தரமானா நடவடிக்கைகளில் இயங்குகிறார். அதை பார்த்து நாங்கள் அச்சப்பட மாட்டோம். நிச்சயம் நிறைய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தம்பிதுரையின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும் என்று தம்பிதுரையை கடும் விமர்சனம் செய்தார். மேலும் கரூரில் காவல்துறையினர் அதிமுக கரை வேட்டி கட்டிய ஏவல்துறையாக தான் செயல்படுகின்றனர் என்றும் ஆளுங்கட்சிக்கு ஆதராவாகதான் தேர்தல் கமிஷன் உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
Loading More post
திருச்சி: 50,000 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு