தாய்மொழியில் பேசத் தெரியாத முதல்வருக்கு மக்களின் உணர்வுகள் எப்படி புரியும் என பாஜக தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.
பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா ஒடிசா மாநிலம் உத்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவை, 19 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு, கையில் எழுதி வைத்திருக்கும் பேப்பர் இல்லாமல், தாய் மொழியில் பேச வராது. தாய் மொழி கூட தெரியாத ஒருவர், இனியும் உங்களை ஆள வேண்டுமா? நவீன் பட்னாயக்கிற்கு இன்னும் தாய் மொழியான ஒடியா பேசத் தெரியாது.
தாய் மொழியே தெரியாத ஒருவர் எப்படி மக்களின் உணர்வுகளை, வலியை, வேதனையை, தேவையை புரிந்து கொள்வார்? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் வலியை, தேவையை, உங்கள் மொழியிலேயே புரிந்து கொள்ளும் ஒருவரை, முதல்வராக தேர்ந்தெடுங்கள். ஒடியா அல்லது தெலுங்கு பேசுபவரை தேர்ந்தெடுங்கள். உங்களில் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பு வழங்குங்கள். வரும் தேர்தலில், பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து, உங்களுடன் உங்கள் மொழியில் பேசும் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுங்கள். நீங்கள் எவ்வளவோ பொறுமையாக உள்ளீர்கள். மீண்டும் ஏற்கனவே செய்த தவறை செய்துவிடாதீர்கள்” எனப் பேசினார்.
Loading More post
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
தாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு!
45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
ராகுல்காந்தி தமிழகம் வருகை.. உருமாறிய கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’