“ஜெயலலிதா கருணையால் அமைச்சரானவர்கள் இவர்கள்” - கார்த்தி சிதம்பரம்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பதவியில் தொடர்வது சரித்திரத்தின் விபரீதம் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Advertisement

மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று காரைக்குடியில் பரப்புரையில் ஈடுபட்டார். 


Advertisement

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், “அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவின் கருணையால் எம்.எல்.ஏக்கள் ஆகி அமைச்சர்கள் ஆனவர்கள். இவர்கள் யாரென்று மக்கள் யாருக்குமே தெரியாது. ஜெயலலிதா மறைந்த உடனேயே இவர்கள் பதவியில் இருந்து விலகி தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். இவர்களுக்கு யாருமே வாக்களிக்கவில்லை. இது ஒரு சரித்திரத்தின் விபரீதம் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement