குத்து பாடலுக்கு நடனமாடிய பெண் போலீஸ்கள் : சர்ச்சை வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமா பாடல் ஒன்றிற்கு பெண் காவலர்கள் மேடையில் ஆடிய நிகழ்ச்சி டெல்லி நடைபெற்றுள்ளது.


Advertisement

கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் அனைத்து பெண் காவலர்கள் சபா ஒன்றின் ஏற்பாட்டின் படி, டெல்லி தென்மேற்கு மாவட்ட பெண் காவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல்களும் ஒலிக்கப்பட்டன. அப்போது பிரபல டான்ஸ் பாடலான ‘சப்னா சவுத்ரி’ என்ற பாடல் இசைக்கப்பட்டது. அந்தப் பாடலால் உற்சாகமடைந்த சில பெண் காவலர்கள் மேடை மீது ஏறி நடனமாட தொடங்கினர்.


Advertisement

இதனை கீழே இருந்த பெண் காவலர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்தார். அவர் மட்டுமின்றி அங்கிருந்த பல பெண் காவலர்கள் வீடியோ எடுத்தனர். பெண் காவலர்கள் நடமாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர் தனது காலல் ஒரு நடன ஸ்டெப் போட்டார். அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement