[X] Close >

எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி!

Pakistan-Army-says-3-soldiers-dead-in-Indian-firing

இந்திய வீரர்களின் தாக்குதலில், தங்களின் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆனால், ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டிருப் பதாக இந்தியா தெரிவித்துள்ளது.


Advertisement

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜவ்ரி மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறு பீரங்கிகளால் நடத்திய தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார். 4 வீரர்கள் காயம் அடைந்தனர்.மற்றொரு இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 5 வயது சிறுமி உயிரிழந்தாள். 15 பேர் காயம் அடைந்தனர். 


Advertisement

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பல்வேறு நிலைகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக, இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம், தங்களின் மூன்று வீரர்கள் மட்டுமே இந்திய பாதுகாப்புப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close