‘சிபிசிஐடி யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது’ - 4 மணி நேர விசாரணைக்கு பின் நக்கீரன் கோபால் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிபிசிஐடி விசாரணை தன்னை எச்சரிக்கும் வகையிலேயே இருந்ததாக, நக்கீரன்‌ ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.


Advertisement

பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோவை வெளியிட்டது குறித்து கோவையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி 2 முறை சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திங்களன்று ஆஜரான நக்கீரன் கோபாலிடம், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை விசாரணை நடைபெற்றது. 

4 மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோபால், யாரையோ காப்பாற்றும் வகையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை அமைந்திருந்ததாக கூறினார். நக்கீரன் கோபால் பேசுகையில், “இன்று விசாரணை மேற்கொண்டதில் மூன்று விஷயம் எனக்கு எச்சரிக்கையாக தெரிந்தது. நீங்கள் யார் இதனையெல்லாம் வெளியே கொண்டு வருவதற்கு? அப்படி வெளியே கொண்டு வந்தால் இதுதான் நிலைமை. மூன்றாவது, யாரையோ காப்பாற்ற சிபிசிஐடி போலீசார் முயற்சிக்கிறது. 


Advertisement

        

1500 வீடியோ என்பது பொள்ளாச்சியில் தெருதெருவாக பேசிக் கொண்டிருக்கிற விஷயம். கொடூரமான அந்த வீடியோவை பார்த்த யாருக்குமே ஒரு ஆதங்கம் வரும், அந்த அடிப்படையில் தான் நானும் அதுதொடர்பாக வீடியோ வெளியிட்டேன். 40க்கும் மேற்பட்ட கேள்விகளை துருவி துருவி கேட்டார்கள். சொல்லவில்லை என்றால் என்ன ஆகும் என்று மிரட்டும் தொனியில் கேட்டார்கள்” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement